NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2024
    01:15 pm

    செய்தி முன்னோட்டம்

    திமுக கட்சி வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் முன்னிலையில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    மேலும், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது.

    மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய திமுக எம்பி கனிமொழி, "திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதுமே எங்களுக்கு முக்கியமானது. தேர்தல் அறிக்கைக் குழுவுக்கு என்னைத் தலைமையேற்க அனுமதித்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்த தேர்தல் அறிக்கை நமது திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல உதவும்" என்று கூறியுள்ளார்.

    திமுக 

    தமிழக மக்களுக்கு திமுக வழங்கி இருக்கும் பொது தேர்தல் வாக்குறுதிகள் 

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம்(யுசிசி) ஆகிய சட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது.

    எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்.

    தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வை தமிழகம் அமல்படுத்தாது.

    கவர்னர் பதவி ஒழிக்கப்படும். மாநில முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே, மாநிலத்திற்கான கவர்னரை நியமிக்க வேண்டும்.

    திருக்குறள் 'தேசிய நூலாக' ஆக்கப்படும்.

    நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 33% இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

    மத்திய அரசு வேலைகளுக்கும் தமிழில் தேர்வு நடத்தப்படும்.

    ரயில்வே துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    இந்தியா திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

    பெண்களுக்கு தொடர்ந்து மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    தேர்தல்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    திமுக

    திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி  சென்னை
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    முதல்வரின் ஸ்பெயின் பயணம்; துணை முதல்வராக உதயநிதி நியமனமா? உதயநிதி ஸ்டாலின்
    தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை  இந்தியா

    தேர்தல்

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேர்தல் பத்திரங்கள்
    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு  ஜம்மு காஷ்மீர்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025