ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அரசின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய துணை அமைச்சராக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி பதவியேற்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுஷில் மோடி, "மூடப்பட்ட கதவுகள் திறக்கபடலாம்" என்றும், அரசியலை "சாத்தியங்களின் விளையாட்டு" என்றும் கூறினார். எனினும் இந்த விவகாரம் குறித்து மேலும் பேச அவர் மறுத்துவிட்டார். பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கூட்டணியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
'நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு மாறுவது எளிதானது அல்ல'
அந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே பதட்டம் நிலவி வந்த நிலையில், இந்த வாரம், மத்திய பாஜக அரசு, சோசலிஸ்ட் தலைவர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை அடுத்து, அது மேலும் சூடு பிடித்துள்ளது. மேலும், நிதிஷ் குமாரின் குடும்பவாத கருத்துக்களுக்கு லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா கடுமையான பதிலடி கொடுத்ததாலும் இரு கட்சிகளுக்கும் இடையே மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நிலைமையை கண்காணித்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுக்கு மாறுவது எளிதானது அல்ல என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.