
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் தொடர்ச்சியாக NIA சோதனை நடைபெற்று வருகிறது.
தீவிரவாதத்தை தடுப்பது, வெளிநாடுகளில் இருந்து தவறான முறையில் நிதி பெறுவது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதும், அவர்களை கைது செய்வதும் தான் என்ஐஏவின் முக்கிய பணி.
இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சியினரின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
குறிப்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், சீமானின் நெருங்கிய நண்பருமான சாட்டை துரைமுருகனின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
என்ஐஏ சோதனை
#JustNow | தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!#SunNews | #NaamTamilarKatchi | #NIARaid pic.twitter.com/JH8u8wv1xw
— Sun News (@sunnewstamil) February 2, 2024