Page Loader
ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை

ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை

எழுதியவர் Sindhuja SM
Jun 30, 2024
04:44 pm

செய்தி முன்னோட்டம்

ஒரு குழந்தை உட்பட ஒன்பது உயிர்களைக் கொன்ற ரியாசி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தியது. ஜூன் 9 அன்று ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியில் ஷிவ் கோரியில் இருந்து கத்ராவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனால் 9 பேர் உயிரிழந்தனர். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஜூன் 15 அன்று என்ஐஏ இந்த வழக்கை எடுத்துக் கொண்டது.

இந்தியா 

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்த முக்கிய சந்தேக நபர் 

ரியாசி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜூன் 19ஆம் தேதி கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான ஹக்கின் டின் என்ற ஹகம் கான் அளித்த தகவலின் அடிப்படையில் ரஜோரியில் சோதனை நடத்தப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஹக்கின் டின் பாதுகாப்பு அளித்து புகலிடங்கள், தளவாட உதவிகள் மற்றும் உணவுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. என்ஐஏ தனது முதற்கட்ட விசாரணையில் இதை கண்டறிந்துள்ளது. ரியாசியில் உள்ள மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மோஹிதா ஷர்மாவின் கூற்றுப்படி, ஹக்கின் டின் பயங்கரவதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த கொடிய சம்பவத்திற்கு வழிவகுத்த அவர்களின் இயக்கங்களையும் செயல்களையும் எளிதாக்க உதவி இருக்கிறார்.