LOADING...
தமிழகத்தில் புதிய செய்திச் சேனல்? இணையத்தில் வைரலாகும் 'வெற்றி' டிவி லோகோ பின்னணி
இணையத்தில் வைரலாகும் 'வெற்றி' லோகோவின் விபரங்கள்

தமிழகத்தில் புதிய செய்திச் சேனல்? இணையத்தில் வைரலாகும் 'வெற்றி' டிவி லோகோ பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 04, 2026
06:07 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக ஊடகத்துறையில் விரைவில் ஒரு புதிய செய்திச் சேனல் நேரடி ஒளிபரப்பிற்கு வரவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு படத்தில், 'வெற்றி' என்ற பெயருடன் கூடிய ஒரு புதிய செய்தி ஊடகத்தின் அதிகாரப்பூர்வ லோகோ இடம் பெற்றுள்ளது. இந்த லோகோவில் உள்ள வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு, தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அடையாளங்களை ஒத்திருப்பதாகப் பதிவிடப்பட்டுள்ளது. லோகோவானது இடதுபுறம் உள்ள வட்டவடிவ சின்னத்தில் பெரிய தங்க நிற 'V' எழுத்தும், அதன் பின்னணியில் வாகை மலர் போன்ற ஒரு மலரும், கீழே பச்சை மற்றும் மஞ்சள் இலைகளும் அமைந்துள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சமூக வலைதளங்களில் விவாதம்

தவெக ஆதரவு ஊடகமா என சமூக வலைதளங்களில் விவாதம்

எக்ஸ் தளப் பதிவில் உள்ள தகவலின்படி, இந்த புதிய சேனலின் லோகோவானது முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கொடி மற்றும் லோகோ நிறங்களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இதனால், இது அந்த அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆதரவு பெற்ற அல்லது அவர்களின் கொள்கைகளைப் பரப்பும் புதிய செய்திச் சேனலாக இருக்கலாமோ என்ற கணிப்புகள் நெட்டிசன்களிடையே எழுந்துள்ளன. இருப்பினும், இந்தச் சேனல் எப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் அல்லது இதன் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இதனால் இது வெறும் வதந்தியா என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே முழு விபரமும் தெரியவரும்.

Advertisement