இந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு
செய்தி முன்னோட்டம்
ராமேஸ்வரம் மாவட்டத்தில் மரைக்காயர் பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம்.
இந்தியா முழுவதும் உள்ள 7 மண்டல நிலையங்கள், 4 மண்டல மையங்கள், 2 கள மையங்கள் உள்ளிட்டவைகளை கொண்ட இந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிலையம் கேரளா மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வருகிறது.
மீன்கள்
விஞ்ஞானி இ.எம். அப்துஸ் சமது குழுவினர் கண்டுபிடித்த மீன் வகைகள்
கடல் மீன் வளத்தினை அதிகரிக்கப்பதற்கான செயல்களில் இந்த ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானியான இ.எம். அப்துஸ் சமது குழுவினர் இந்தியாவின் கடல்பகுதியில் 2 புதிய சீலா மீன் வகைகள் கண்டுபிடித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கண்டறிதல்
இந்திய கடல் பகுதிகளில் மொத்தம் 4 வித சீலா மீன்கள் காணப்படுகிறது
பொதுவாக சீலா மீன்களை, நெய் மீன் என்றும் வஞ்சிரம் மீன் என்றும் வெவ்வேறு மாவட்ட மக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைத்து வருகிறார்கள்.
இந்தியாவின் கடல் பகுதிகளில் மொத்தம் 4 வித சீலா மீன்கள் காணப்படுவதாக கூறுகிறார்கள்.
அது கட்டையன் சீலா, நெட்டையன் சீலா, லோப்பு சீலா, நுனா சீலா என்று அறியப்படுகிறது.
இதில் முதல் 2 வகைகள் தான் அதிகளவில் மீனவர்களால் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
புதுவகை
உடலில் புள்ளிகளை கொண்ட சீலா மீன் வகைகள்
இதனை தவிர்த்து பசிபிக் கடல்பகுதியில் ஸ்பாட்டட் சீர் பிஷ் என்னும் உடலில் புள்ளிகளை கொண்டுள்ள சீலா மீன்கள் ஒற்றை இனமாக வகைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது உடலில் தனித்துவமான புள்ளிகளை கொண்ட 2 புதிய சீலா மீன்களை இந்த கொச்சியிலுள்ள ஆராய்ச்சி நிலையம் கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் சீலா மீன்களின் இன எண்ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்ந்துள்ளது.
இதனை 'அரேபியன் ஸ்பாரோ சீர் பிஷ்', 'ரஷ்ஷல்ஸ் ஸ்பாட்டட் சீர் பிஷ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
மீன்
மீன்வளத்துறைக்கு நன்மை பயக்கும் விதமான கண்டுபிடிப்புகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 2 வகைகள் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் கடற்பகுதியிலிருந்து அந்தமான் கடல் வரையுமான வங்காள விரிகுடா பகுதியிலும், கேரளாவின் கடல் பகுதியிலிருந்து அரேபிய வளைகுடா வரையிலுமான பகுதியிலும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது போன்ற கண்டுபிடிப்புகள் மீன்வளத்துறைக்கு நன்மை பயக்கும் என்பதோடு, கடல் பல்லுயிர் பற்றிய புரிதலுக்கு பயன்படும் என்றும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.