புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்
செய்தி முன்னோட்டம்
நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தி ஹிந்து நாளிதளிடம் பேசிய இந்தியா SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் என்.கே. அரோரா, ஜே.என்.1 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என விவரித்தார்.
"அதிக அபாயம் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்கள் மட்டும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் இப்போது செலுத்திக் கொள்ளலாம்.
தற்போது பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தேவையில்லை. மக்கள் பீதி அடையாமல் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என அரோரா கூறினார்.
2nd card
இவ்வகை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள், துணை வகைகள் மற்றும் பிறழ்வுகள் கண்டறியப்படுவதை அரோரா சுட்டிக்காட்டினார்.
"அதிர்ஷ்டவசமாக, இந்த ஓமிக்ரான் வகைகள் எதுவும், தீவிர பாதிப்பையும் தீவிர பாதிப்பையோ, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையோ ஏற்படுத்தாது.
ஜே.என்.1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், இருமல், அவ்வப்போது வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை அடங்கும். ஒரு வாரத்திற்குள் இது குணமாகிவிடும்.
மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களிடம் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், சேகரிக்கப்படும் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது" என அரோரா கூறினார்.
3rd card
கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 656 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,742 ஆக உயர்ந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சமயத்தில் கேரளாவில் தொற்று பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவில் இதுவரை 5,33,333 கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
17 டிசம்பர் 2023 நிலவரப்படி, உலகளவில் 772 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்புகளும் மற்றும் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன.