331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு
தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு கோவில்களுக்கான சீரமைப்பு செலவு பட்டியலை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள 745 கோவில்களில் 331 கோடி திருப்பணிகள் நடைப்பெறும் எனக்கூறியுள்ளார். திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலுக்கு 7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், ஈரோடு வேலாயுதசாமி கோவில், என 15 கோவில்களுக்கு 26 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும் என கூறினார்.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கான சீரமைப்பை வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு
ரமேஸ்வரம் இருந்து காசிக்கு இலவசமாக ஆன்மீக பயணத்துக்கு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள். இலவச திருமணம் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 4,262 கோடி மதிப்பு கொண்ட 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன. மேலும், 756 கோவில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கப்படும் எனவும் அதுவே 8 கோவிலுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மற்றுன் மருதமலை கோவில் என 5 கோவிலுக்கு 200 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என கூறியுள்ளார்.