NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்
    இந்த பயணத்தின் போது நேபாள பிரதமர் பிரசந்தா, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை சந்திப்பார்.

    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்

    எழுதியவர் Sindhuja SM
    May 31, 2023
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அதிகாரபூர்வ பயணமாக இன்று(மே 31) இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். அவருடன் அவரது உயர்மட்ட அரசாங்க குழுவும் வரவுள்ளது.

    இந்த பயணத்தின் போது நேபாள பிரதமர் பிரசந்தா, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை சந்திப்பார்.

    மேலும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார்.

    இந்த 4 நாள் சுற்றுப்பயணத்தின் போது, புது டெல்லி, உஜ்ஜைன் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் ஆகிய இடங்களை அவர் பார்வையிட இருக்கிறார்.

    details

     பிரதமர் பிரசாந்தாவின் நான்காவது இந்திய பயணம் 

    பிரசந்தா(68), தனது மகள் கங்கா தஹாலுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

    "பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு செல்கிறார். மேலும் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அவர் வழிநடத்துவார்" என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி-பிரசந்தா சந்திப்பின் போது, ஆற்றல் ஒத்துழைப்பு, இணைப்பு திட்டங்கள், வர்த்தக வசதிகள் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு முயற்சிகள் ஆகியவை விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    "நேபாளப் பிரதமர் 'பிரசாந்தா' நான்காவது இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணம் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான, பன்முக மற்றும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்" என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர்
    நேபாளம்
    மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் லண்டன்
    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே உலக செய்திகள்
    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர்  அமெரிக்கா

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலகம்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    மோடி

    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025