உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, NEET-UG மையம் வாரியான முடிவுகள் அறிவிக்கப்பட்டது
தேசிய தேர்வு முகமை (NTA) அனைத்து மாணவர்களுக்குமான NEET-UG 2024 தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த முடிவுகளை, தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் NTA NEET இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் exams.nta.ac.in/NEET/ மற்றும் neet.ntaonline.in என்ற இணையதளத்திலும் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம். முன்னதாக ஜூலை 18 வியாழன் அன்று உச்ச நீதிமன்றம், ஜூலை 20 மதியம் 12 மணிக்குள் NEET UG முடிவுகளை அறிவிக்குமாறு NTA க்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உத்தரவில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிடுமாறும் ஆனால் மாணவர்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவர்களின் அடையாளங்களை மறைத்து முடிவுகள் வெளியிடப்படவேண்டும்
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சனிக்கிழமை நண்பகலுக்குள் நகரம் மற்றும் மையம் வாரியாக தனித்தனியாக முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டது. 'நீட்-யுஜி மறுதேர்வு பெரிய அளவில் புனிதம் இழந்துவிட்டது என்ற உறுதியான அடிப்படையில் மட்டுமே நடத்த முடியும்' என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது வலியுறுத்தியுள்ளது. 14 வெளிநாடுகள் உட்பட 571 நகரங்களில் 4,750 மையங்களில் 23.33 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மே 5 அன்று தேர்வெழுதியுள்ளனர். அதன் பின்னர் நடைபெற்ற மறுதேர்வில் சுமார் 1,563 பேர் தோற்றனர்.