சாலஞ் வீடியோ என்ற பெயரில் ஆபாசம்: சம்மன் அனுப்பிய குழந்தைகள் நல வாரியம்
செய்தி முன்னோட்டம்
தாய்மார்கள் மற்றும் மகன்கள் சம்பந்தப்பட்ட 'அநாகரீகமான' உள்ளடக்கம் தொடர்பாக யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR), யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள சில வீடியோக்களில், தாய் மற்றும் மகன்கள் சம்பந்தப்பட்ட அநாகரீகமான உள்ளடக்கம் இருப்பதாக கூறி கவலை தெரிவித்துள்ளது.
அத்தகைய வீடியோக்கள் அடங்கிய சேனல்களின் பட்டியலுடன் YouTube இந்தியாவின் அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவர், ஜனவரி 15 அன்று நேரில் ஆஜராகுமாறு, அந்த ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
card 2
கடிதம் அனுப்பியுள்ள பாதுகாப்பு ஆணையம்
யூடியூப் இந்தியாவின் அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கையின் தலைவரான மீரா சாட்டிற்கு எழுதிய கடிதத்தில், என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ, யூடியூப் சேனல்களில் தாய்மார்கள் மற்றும் மகன்கள் சம்பந்தப்பட்ட அநாகரீகமான செயல்களைச் சித்தரிக்கும் சவால்களுடன் ஆபத்தான போக்கை கடைபிடிப்பதாக, ஆணையம் உணர்ந்ததாகக் கூறினார்.
ஆதாரங்களின்படி, 'சாலஞ் வீடியோக்களில்' தாய் மற்றும் மகன்களுக்கு இடையே உள்ள அநாகரீகமான செயல்கள், தாய்மார்கள் மற்றும் பருவ வயது மகன்களுக்கு இடையே முத்த பரிமாற்றங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
card 3
போக்சோ சட்டத்தை மீறும் வீடியோக்கள்
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்திப்படி, "தாய் மற்றும் மகன்களை பற்றிய வீடியோக்களை கொண்ட யூடியூப் சேல்களில் உள்ள பல சாலஞ் வீடியோக்கள், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012 ஐ மீறுகின்றன." என கனுங்கோ தெரிவித்துள்ளார்.
"YouTube இதை சரிசெய்ய வேண்டும். குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டும். இதுபோன்ற வீடியோக்களை வணிகமயமாக்குவது, ஆபாசத்தை விற்பது போன்றது. குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வீடியோக்களை எந்த தளத்தில் வெளியிட்டாலும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.