Page Loader
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை 

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை 

எழுதியவர் Sindhuja SM
Jan 30, 2024
11:06 am

செய்தி முன்னோட்டம்

ஆயுதமேந்திய சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை ஏற்றிச் சென்ற கப்பலை இந்திய கடற்படையின் 'ஐஎன்எஸ் சுமித்ரா' போர்க்கப்பல் வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஐஎன்எஸ் சுமித்ரா, 'அல் நயீமி' என்ற மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட ஒரு கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளது. 11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து 19 பாகிஸ்தான் பணியாளர்களை மீட்டதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு கடத்தப்பட்ட ஈரானியக் கொடியுடன் கூடிய எம்.வி. இமான் என்ற கப்பலை ஐ.என்.எஸ் சுமித்ரா மீட்டது. தற்போது, கடற்கொள்ளையர்களால் கடத்தப்ட்ட அல் நயீமியைக் கண்டுபிடித்து மீட்க ஐ.என்.எஸ் சுமித்ராவை இந்திய கடற்படை அனுப்பியது. அதனையடுத்து, வெற்றிகரமாக 2வது கடற்கொள்ளையர் எதிர்ப்பு பணியை இந்திய கடற்படை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் தகவல்