NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி  
    இந்தியா

    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி  

    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி  
    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023, 12:25 pm 0 நிமிட வாசிப்பு
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி  
    அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக கட்சியில் இருந்தார்.

    தமிழ்நாடு மின்சாரத்துறை செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று(மே 26) அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. என் தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது." என்று கூறியுள்ளார். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டிலும், அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் ஒருவரது வீட்டில் சோதனை செய்ய வருமான வரித்துறையினர் இன்று காலை அங்கு சென்றனர்.

    செந்தில் பாலாஜிக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கு 

    அப்போது, அவரது வீடு பூட்டி இருந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் சுவரேறி குதித்து வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக கட்சியில் இருந்தார். அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாக அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல், கரூர், ரமேஸ்வரப்பட்டியில் இருக்கும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு, மற்றும் கரூர், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது சகோதரர் வீடு மற்றும் சென்னையில் உள்ள அவர் சம்மந்தப்பட்ட இடங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  இந்தியா
    பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு நிறுவனம்! ராயல் என்ஃபீல்டு
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்
    திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம் திருவிழா
    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை திரையரங்குகள்
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்

    திமுக

    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  தமிழ்நாடு
    பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    தமிழ்வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகம்  கருணாநிதி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023