மு.க.ஸ்டாலினின் மாமாவும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் காலமானார்
செய்தி முன்னோட்டம்
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமானவர் முரசொலி செல்வம்.
இவர் கருணாநிதியின் உடன்பிறந்த சகோதரியான சண்முக சுந்தரம்மாள் மகன். இவர் கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்துள்ளார்.
முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரர்.
இவர் இன்று மாரடைப்பால் காலமானார். இன்று காலை முரசொலி நாளிதழுக்காக குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது உடல் பெங்களுருவில் இருந்து தற்போது சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது.
அவரது மறைவு திமுகவினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முரசொலி நாளிதழின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர் செல்வம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | முரசொலி செல்வம் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது#SunNews | #MurasoliSelvam | #DMK pic.twitter.com/zYImjONc2d
— Sun News (@sunnewstamil) October 10, 2024