மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மின்சார ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
மும்பை சென்ட்ரலில் இருந்து கார் ஷெட்டுக்குள் நுழையும் போது, மதியம் 12 மணியளவில் காலியான மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வினீத் அபிஷேக் கூறுகையில், மதியம் 12.10 மணியளவில் ரயில் தடம் புரண்டபோது ரயில் காலியாக இருந்ததால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.
இந்த விபத்தால் தாதரை நோக்கி செல்லும் ரயில் பாதை தடைபட்டுள்ளதால், புறநகர் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மாற்று பாதை
விரைவுப் பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்
விபத்தைத் தொடர்ந்து, சர்ச்கேட் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையேயான மெதுவான பாதை நிறுத்தப்பட்டது.
மேலும், இந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே உள்ள விரைவுப் பாதையில் ரயில்கள் திருப்பி விடப்பட்டன. தற்போது அதில் ரயில் சேவைகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் தடம் புரண்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பாதையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், தடம் புரண்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11), திருவள்ளூரில் சரக்கு ரயிலுடன் ரயில் மோதியதில் தர்பங்கா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்தன. இந்த சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.