Page Loader
மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ்
மனோஜ் சானேவும் அவரது காதலியும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிரா ரோடு குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர்.

மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ்

எழுதியவர் Sindhuja SM
Jun 09, 2023
04:09 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை மிரா ரோடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானே, தனக்கு HIV பாசிட்டிவ் இருப்பதாக கூறியுள்ளார். அதனால், தனது காதலி சரஸ்வதி வைத்யாவுடன் எந்தவிதமான உடல் உறவிலும் ஈடுபட்டதில்லை என்றும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மும்பை மிரா ரோட்டில் உள்ள வாடகை குடியிருப்பில் வசித்து வந்த மனோஜ் சானே(56) தனது காதலியை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியதற்காக கைது செய்யப்பட்டார். மேலும், பிரஷர் குக்கரில் தனது காதலியின் உடல் பாகங்களை வேகவைத்து, பின்னர் அவற்றை அப்புறப்படுத்த முயற்சித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனோஜ் சானேவும் அவரது காதலியும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிரா ரோடு குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர்.

DETAISL

சரஸ்வதி எனக்கு மகள் போன்றவள்: குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் 

16 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதியை தனது ரேஷன் கடையில் சந்தித்ததாக மனோஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தனக்கு HIV + இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதன்பிறகு அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் உயிரிழந்த "சரஸ்வதி எனக்கு மகள் போன்றவள்" என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சரஸ்வதி வைத்யா அனாதை என்றும், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்றும் போலீஸார் நேற்று தெரிவித்திருந்தனர். ஆனால், இன்று, சரஸ்வதியின் மூன்று சகோதரிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நயா நகர் காவல் நிலையத்திற்கு வந்தனர். கூடுதலாக, சரஸ்வதி வளர்ந்த அனதை இல்லத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தன்னுடைய மாமாவுடன் வசித்து வருவதாக சரஸ்வதி கூறியிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.