குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கு தலைமையேற்க இந்தியா ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அழைப்பு விடப்பட்டது.
தற்போது, ஜனாதிபதி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அடுத்த வாரம், சென்னைக்கு முதல்முறையாக ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.
அவர் பதவியேற்றபிறகு, தமிழ்நாட்டிற்கு வருவது இதுவே முதல்முறை.
இந்த விழாவில், விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
card 2
1 வாரம் மூடப்படும் முதுமலை யானைகள் முகாம்
இந்த சென்னை விழாவிற்கு முன்னதாக ஜனாதிபதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியவுள்ளார் என கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, 5-ஆம் தேதி வருகிறார்.
ஆஸ்கார் விருது வென்ற 'தி எலிபாண்ட் விஸ்பிரர்ஸ்' ஜோடியான பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து பாராட்டி, அங்குள்ள பழங்குடி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேச உள்ளார்.
இதற்காக, தெப்பக்காடு யானைகள் முகாமை இன்று முதல் 5-ந் தேதி வரை 6 நாட்கள் முகாம் மூடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.