
மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை
செய்தி முன்னோட்டம்
தனது மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றதாக சுனிதா என்பவர் காவல்துறையில் புகாரளித்ததன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குளச்சல் என்னும் பகுதியில் வசித்து வருகிறார்கள் சுனிதா மற்றும் அவரது மகள் அமர்சியா.
அமர்சியா பி.காம் 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.
விசாரணை
கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
இதனிடையே கடந்த புதன்கிழமை தனது மகள் அமர்சியாவை ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து கடத்தி சென்றதாக சுனிதா குளச்சல் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை தனது விசாரணையினை துவங்கியது.
அதன்படி முதற்கட்டமாக அமர்சியாவின் தாயார் சுனிதாவிடம் போலீசார் முதலில் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை
யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என தாயாரை விசாரித்த காவல்துறை
விசாரணையின் போது, யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என்று கேட்கப்பட்டதற்கு, தனது மகள் ஒருவரை காதல் செய்வதாகவும், அந்த நபர் தான் தனது மகளை கடத்தியிருப்பார் என சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி மேற்கொண்ட விசாரணையில் அமர்சியாவின் காதலன் டேனியல் ஆகாஷ் அதே பகுதியில் வசித்து வருபவர் என்று தெரியவந்துள்ளது.
டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது அமர்சியா அங்கிருந்துள்ளார்.
இருவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
காவல்
கல் உப்பை பரப்பி முட்டி போட வைத்து கொடுமை
அப்போது அமர்சியா கூறுகையில், 'நான் ஆகாஷை காதிலிக்கிறேன். அதில் எனது தாயாருக்கு விருப்பம் இல்லை. அதனால் என்னை வீட்டில் ஓர் அறையில் அடைத்து வைத்து அடித்தார்' என்றும்,
'கல் உப்பை பரப்பி அதில் என்னை முட்டி போட வைத்தும், நடக்க வைத்தும் கொடுமைப்படுத்தினார்.
இதுகுறித்து நான் ஆகாஷிடம் கூறினேன், பின்னர் அவர் வீட்டிற்கே சென்று விட்டேன்' என்றும் கூறியுள்ளார்.
அறிவுரை
திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை வழங்கிய காவல்துறை
இதுகுறித்து தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அமர்சியா மேஜர் என்பதால் காவல்துறையினர் அவர் விருப்பப்படி அவரை அவரது காதலனுடன் செல்ல அனுமதித்ததோடு, விரைவில் திருமணம் செய்துக்கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.
இன்னமும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர் அவர்களது பிள்ளைகளை கொடுமை படுத்துவதை நிறுத்தவில்லை என்பது இந்த செய்தி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.