மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம்
செய்தி முன்னோட்டம்
குஜராத் மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட வேண்டிய ரூ.14.62 கோடி முழுவதையும் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் டெபாசிட் செய்துள்ளதாக ஓரேவா குழுமம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று(ஏப் 18) தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி மாதம், இடைக்கால இழப்பீட்டை ஓரேவா குழுமம் வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த பலத்தை பராமரிக்கும் பணி ஓரேவா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பாலம் சரியாக பராமரிக்கப்படாதது தெரியவரவே குஜராத் உயர் நீதிமன்றம் ஓரேவா குழுமத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.
details
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு
பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டிய மொத்தத் தொகையையும் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் டெபாசிட் செய்துள்ளதாக, தற்காலிக தலைமை நீதிபதி ஏ.ஜே. தேசாய் மற்றும் நீதிபதி பிரேன் வைஷ்ணவ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் ஓரேவா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிவாரண தொகை இரண்டு தவணைகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டபடி இந்தத் தொகை வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 135 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காயமடைந்த 56 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.