Page Loader
இன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல் 
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது

இன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 07, 2024
09:40 am

செய்தி முன்னோட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கூடி நரேந்திர மோடியை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து புதிய அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும் என கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம், பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அதன்பிறகு, NDA ஆட்சி அமைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம், MPக்கள் தங்கள் ஆதரவு கடிதங்களை வழங்குவார்கள், மோடியை புதிய பிரதமராக ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி அரசு

பாஜகவின் மூன்றாவது ஆட்சிக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது

முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரின் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை மிக முக்கிய கூட்டணி கட்சிகளாக கருதப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் முறையே, 16 மற்றும் 12 மக்களவைத் தொகுதிகளைக் இக்கட்சிகள் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 28 இடங்களை வைத்திருப்பதாலும், பாஜக கட்சி தனிப்பெரும்பான்மை பெறத் தவறியதாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த இரு தலைவர்களும் முக்கியப் பங்காற்றுவார்கள். JD(U) மூன்று கேபினட் சீட்களையும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ஒரு அமைச்சரவை மற்றும் 2 MoS பெர்த்களையும், சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி, ஒரு அமைச்சரவை மற்றும் ஒரு மாநில அமைச்சர் பதவியையும் கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.