NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை 
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை

    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை 

    எழுதியவர் Nivetha P
    May 05, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தசில தினங்களாக கோடை மழை பொழிந்து வெயிலின் தாக்கத்தினை சற்று குறைத்துள்ளது.

    இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 6ம்தேதி(நாளை)காற்று சுழற்சி உருவாகும் என்று வானிலை அறிக்கை முன்னதாக தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தற்போது அந்த காற்று சுழற்சியானது வலுப்பெற்று நாளை மறுநாள்(மே.,7)காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை மையத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

    அதன்படி இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்தாண்டின் முதல் புயலாக உருவாகும் இதற்கு 'மோக்கா'புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலைமைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டலக்கீழடுக்கு சுழற்சி நாளை உருவாகிறது.

    நாளை மறுநாள் புயலாக மாறும் பட்சத்தில் இதன் நகர்வுகள் கண்காணிக்கப்படும்.

    வானிலை அறிக்கை 

    மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் 

    மேலும் அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நாளை மறுதினம் வரை மிதமான மழை பெய்யும்.

    சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலையானது 4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும்.

    சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7 மற்றும் 8ம் தேதிகளில் 60 முதல் 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்,

    அதே போல் 10ம் தேதி மணிக்கு 80கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதனால் மேற்கூறப்பட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வானிலை அறிக்கை
    சென்னை
    புதுச்சேரி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சிபிசிஐடி
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  இந்தியா
    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு  பள்ளி மாணவர்கள்
    தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    வானிலை அறிக்கை

    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    சென்னை

    சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்  உதயநிதி ஸ்டாலின்
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  இந்தியா

    புதுச்சேரி

    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு இந்தியா
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் திருச்சி
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025