பிரதமர் மோடியின் பிரச்சார வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட விவகாரம்
வரும் 10ம்தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி நேற்று(ஏப்ரல்.,30)முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் பெங்களூரில் பிரச்சாரங்களை செய்தநிலையில்,நேற்று மாலை மைசூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ரோட்ஷோவில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவாறு ஊர்வலமாக வந்த நிலையில் சாலையின் இருப்புறமும் பாஜக தொண்டர்கள் பூக்களைத்தூவி அவரை வரவேற்றனர். அப்போது எதிர்பாராவிதமாக மோடி வாகனத்தின்மீது செல்போன் வீசப்பட்டது. அது அவர்மீது விழாமல் வண்டியின் முன்பகுதியில் விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானநிலையில் பிரதமருக்கான பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என கேள்விகள் எழுந்தது. இதுகுறித்து தற்போது காவல்துறையினர், பிரதமரை பார்த்த உற்சாகத்தில் பூக்களைத்தூவும்போது தெரியாமல் போன் பறந்துள்ளது. இதில் எந்தவொரு தவறான எண்ணமுமில்லை என்று விசாரணை நடத்தி தெரிவித்துள்ளார்கள்.