சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா
எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM), மிசோரம் சட்டமன்றத்தின் 27 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா செய்தார். முதல்வர் ஜோரம்தங்காவின் MNF கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டியிடம் சமர்ப்பித்தார். முதல்வர் ஜோரம்தங்காவின் கட்சி தோற்றது மட்டுமல்லாமல், அவர் தனிப்பட்ட முறையிலும் இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். ஐஸ்வால் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ZPM வேட்பாளர் லால்தன்சங்கா, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை விட 2,101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மிசோரம் முதல்வரை தோற்கடித்தார்.