Page Loader
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை- இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்
உறுப்பு தானம் வழங்கியவருக்கு அரசு மரியாதை செய்யும் அமைச்சர் சுப்பிரமணியன்

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை- இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்

எழுதியவர் Srinath r
Sep 26, 2023
02:30 pm

செய்தி முன்னோட்டம்

மரணிக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பின்படி தேனி மாவட்டம் சின்னமனூரில் உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலின்(37) இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது.இறுதிச்சடங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். அரசு ஊழியரான வடிவேலு கடந்த 23ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி முளைச்சாவடைந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தேனி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அமைச்சர், உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்கும் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

அரசு மரியாதை வழங்கியது குறித்த அமைச்சரின் ட்விட்டர் பதிவு