அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர்
செய்தி முன்னோட்டம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை (பிப்ரவரி 17)திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திமுகவின் மூத்த தலைவரும், தமிழக அரசியலில் முக்கிய நபருமான துரைமுருகன், கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
சளி தொடர்பான பிரச்சினைக்காக அமைச்சர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என கூறப்படுகிறது.
இதையடுத்து. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று துரைமுருகனின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
டிஸ்சார்ஜ் எப்போது?
அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலை சீரடைந்தவுடன் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
86 வயதான துரைமுருகன் அடிக்கடி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது திமுக கட்சித் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலைப் பொறுத்தவரை, தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவராக துரைமுருகன் இருந்தாலும், அவரது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் தொடர்புடைய வழக்கில் கடந்த ஜனவரி தொடக்கத்தில் அமலாக்கத்துறை அவர்களது வீட்டில் சோதனை நடத்தியது நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் துரைமுருகன் தனது மகனுடன் டெல்லி சென்று வந்த நிலையில், அரசியல் ரீதியாக அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.