பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்
உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிருஷ்ணகிரியில் நடைபெறும் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று(ஆகஸ்ட் 12) சேலத்தில் இருந்து தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் காரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, பெங்களூர் ஓசூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல் வயிற்றில் ஏற்பட்ட லேசான வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல் நலம் தேறிவிட்டதால் அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர்.