Page Loader
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2024
09:23 am

செய்தி முன்னோட்டம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை துவங்கியது. உறுதி மொழியுடன் துவங்கிய இந்த போட்டியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி, அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16ஆம் தேதிகளில் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இன்று அலங்காநல்லூரில் நடைபெறும் இந்த போட்டி, காலை 7 மணி அளவில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர். பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தார். உடன் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ட்விட்டர் அஞ்சல்

உதயநிதி கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தார்