அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று(செப்.,27)தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடிமின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் செப்.,28 மற்றும் 29 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
மேலும் கோயம்பத்தூர் மாவட்ட மலையோர பகுதிகளான நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் செப்.,30ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அடுத்த 7 நாட்களுக்கு கடல் பகுதிகளில் காற்றின் வேகத்தில் மாறுபாடு இருக்கும் என்பதால் மீனவர்களுக்க்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.