Page Loader
வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி

வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
May 29, 2024
02:49 pm

செய்தி முன்னோட்டம்

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் நேற்று தீவிர வெப்பத்தின் பிடியில் இருந்தன. எனவே, பாதரசம் ராஜஸ்தானின் சுரு மற்றும் ஹரியானாவின் சிர்சாவில் 50 டிகிரி செல்சியஸைத் தொட்டது. மேலும், பாதரசம் டெல்லியில் இயல்பை விட ஒன்பது புள்ளிகள் அதிகமாக இருந்தது. டெல்லியில் உள்ள குறைந்தபட்சம் மூன்று வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸாக அல்லது அதற்கு மேலாக பதிவாகியுள்ளது. டெல்லியில் உள்ள முங்கேஷ்பூர் மற்றும் நரேலாவில் 49.9 டிகிரியும், நஜப்கரில் 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

இந்தியா 

கனமழையால் 35 பேர் பலி, பலர் மாயம் 

இந்த பருவத்தில் டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். 50.5 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையுடன் நாட்டிலேயே அதிக வெப்பமான இடமாக ராஜஸ்தானில் உள்ள சுரு உள்ளது. அதைத் தொடர்ந்து ஹரியானாவின் சிர்சா(50.3 டிகிரி செல்சியஸ்), முங்கேஷ்பூர் மற்றும் நரேலா(49.9 டிகிரி செல்சியஸ்), நஜஃப்கர்(49.8 டிகிரி செல்சியஸ்), சிர்சா(49.5 டிகிரி செல்சியஸ்), ராஜஸ்தானின் கங்காநகர்(49.4 டிகிரி செல்சியஸ்), ராஜஸ்தானின் பிலானி, பலோடி, ஜான்சி (49 டிகிரி செல்சியஸ்) ஆகியவை உள்ளன. இதற்கிடையில், ரீமல் புயலால் தூண்டப்பட்ட கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் வடகிழக்கு மாநிலங்களில் குறைந்தது 35 பேர் இறந்தனர். இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மிசோரம் மாநிலத்தில் டஜன் கணக்கானவர்களை இன்னும் காணவில்லை.