ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார்
ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். முன்னதாக கடந்தவாரம், கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேசமூர்த்தி, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கதாக விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
கணேசமூர்த்தி காலமானார்
#BREAKING | ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி மாரடைப்பால் காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கணேச மூர்த்தி... pic.twitter.com/s5jF0yzzPm— Sun News (@sunnewstamil) March 28, 2024