Page Loader
மகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

மகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2023
09:26 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இரவு நேரத்தில் தொழிற்சாலை மூடப்பட்டிருந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

மகாராஷ்டிரா தொழிற்சாலையில் தீ விபத்து