NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்
    "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடியுள்ளார்

    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

    2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை வழிநடத்திய மன்மோகன் சிங், சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைத்து இதுபோன்ற "வெறுக்கத்தக்க, நாகரிகமற்ற மற்றும் முரட்டுத்தனமான சொற்களை எந்த முந்தைய பிரதமரும் பயன்படுத்தவில்லை" என்று கூறினார்.

    மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில், "பொது சொற்பொழிவின் கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர் மோடி" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    2024 தேர்தல்

    பஞ்சாப் மாநிலத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

    பஞ்சாபில் உள்ள அனைத்து 13 தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், இறுதிக் கட்டப் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளில் இருந்தபோது, ​​மன்மோகன் சிங் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் ராஜஸ்தானில் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, 2006ஆம் ஆண்டின் போது, நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை இருக்க வேண்டும் என்று சிங் கூறியதாக பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார்.

    இது குறித்து பதிலளித்த மன்மோகன் சிங் "என் வாழ்நாளில் நான் ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை வேறுபடுத்திக் காட்டியதில்லை. இது பாஜகவின் பழக்கம்" என்று அவர் கூறியுள்ளார்.

    பொருளாதாரம்

    இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பாஜகவை கடுமையாக சாடினார் மன்மோகன் சிங்

    மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஆளும் பாஜகவை கடுமையாக சாடினார்.

    "பணமதிப்பு நீக்கம், தவறாக நிர்வகிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் மோசமான நிர்வாகம் ... தொற்றுநோய்களின் போது மோசமான நிலைமைகளை உருவாக்கியுள்ளன. சராசரியாக 6-7% ஜிடிபி வளர்ச்சி சாதாரணமாகிவிட்டது. பிஜேபி அரசாங்கத்தின் ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 6% க்கும் குறைவாக குறைந்துள்ளது. காங்கிரஸ்-யுபிஏ ஆட்சியின் போது இது 8% ஆக இருந்தது," என்று அவர் கூறினார்.

    "பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் குடும்ப சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    நரேந்திர மோடி

    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    தேஜஸ் போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் பாதுகாப்பு துறை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி உத்தரகாண்ட்
    காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல் துபாய்

    பிரதமர்

    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு ஜப்பான்

    பிரதமர் மோடி

    மோடியின் கோவை ரோடு ஷோவிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்ட மாணவர்கள் மோடி
    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்  இந்தியா
    "திமுக '5ஜி' குடும்ப ஆட்சி": பிரதமர் மோடி பிரச்சார உரை மோடி
    பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025