Page Loader
குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 
குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 

எழுதியவர் Nivetha P
Apr 28, 2023
06:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாகத்தினை அடுத்த கரடிப்புத்தூர் என்னும் பகுதியில் கேசவன் என்பவர் மாந்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார். இந்த தோப்பில் கடந்த மார்ச் மாதம் காவலாளியாக சேர்த்துள்ளார் தர்மய்யா(24). இவர் தமது மனைவி(22) மற்றும் 3 வயது மகனுடன் மாந்தோப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆந்திரா மாநில திருப்பதியில் புட்டிரெட்டி கண்டிகையை சேர்ந்த பழங்குடியினத்தினை சேர்ந்தவர். இந்நிலையில் கேசவன் கடந்த 23ம்தேதியன்று மாந்தோப்பிற்கு வந்தப்பொழுது கணவன் மனைவிக்குள் சண்டை நடந்து கொண்டுள்ளது. பின்னர் அவர் தண்ணீர் பாய்ச்சிவிட்டு திரும்புகையில் தர்மய்யாவிடம் கேட்டப்பொழுது தனது மனைவி அருகிலுள்ள மாந்தோப்பில் வேலைபார்க்கும் உறவினரை காண தன் மனைவி சென்றதாக கூறியுள்ளார். பின்னர் கேசவனிடம் தர்மய்யா இருசக்கரவாகனத்தினை வாங்கிகொண்டு தமது குழந்தையுடன் சென்றுள்ளார்.

கொலை

கொலை செய்த காவலாளி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

ஆனால் அவர் மறுநாள் வேலைக்கு வராததால், குத்தகைதாரர் கேசவன் பக்கத்து மாந்தோப்பில் பணிபுரியும் தர்மய்யாவின் உறவினரை அழைத்துக்கொண்டு ஆந்திரா சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு தர்மய்யா தனது குழந்தையை மட்டுமே அழைத்துவந்ததாகவும், தற்போது அவர் எங்குச்சென்றார் என தெரியாது என்றும் கூறியுள்ளனர். தர்மய்யா குடித்துவிட்டு தனது மனைவியினை மாந்தோப்பில் புதைத்துவிட்டேன் என்று கூறியதாக கேசவனுக்கு தகவல் வந்துள்ளது. அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மாந்தோப்பினை சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது சம்பந்தமில்லாமல் மண் குவியலின்மேல் ஈ-க்கள் மொய்த்துக்கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அவரளித்த தகவலின்பேரில், பாதிரிவேடு போலீசார் அங்குவந்து குழியினைத்தோண்டி லட்சுமியின் சடலத்தினை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் ப்ரீத்தி அளித்த புகாரின்பேரில் தர்மய்யா மீது ஐபிசி 302, 201பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.