
சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது
செய்தி முன்னோட்டம்
இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கடத்தி வந்த இளைஞரை கைது செய்ய சுங்கத்துறையினர் போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கடத்தி வரப்பட்ட இந்த ஹெரோயினின் மதிப்பு பல கோடி ரூபாய்களை தாண்டும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் இது போன்ற பொது இடங்களில் தொடர் சோதனைகளும், சாலைகளில் வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஹெராயின் கடத்தல்
#BREAKING || சென்னையில் ரூ.11 கோடி போதைப் பொருள் சிக்கியது
— Thanthi TV (@ThanthiTV) April 24, 2024
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது
தோகாவில் இருந்து வந்த இளைஞரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்
11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி… pic.twitter.com/xVAIvDMfPB