பிளாட்பாரத்தில் இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை
செய்தி முன்னோட்டம்
மதுரையில் யாசகார்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், தூங்கும் போது ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்க்கரை கட்டிட தொழிலாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று, அங்குள்ள பிளாட்பாரத்தில் உறங்கி உள்ளார்.
மேலும் கட்டிட வேலை கிடைக்காத சூழலில் யாசகம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
அதே பிளாட்பாரத்தில் முருகன் என்ற மற்றொரு யாசகர் வசித்து வந்துள்ளார்.
இருவருக்கும் நடைபெற்ற வாக்குவாதத்தில், முருகனை சர்க்கரை ஆபாசமாக திட்டியதால், ஆத்திரமடைந்த முருகன் நள்ளிரவில் சர்க்கரை தூங்கிகொண்டிருந்த போது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.
மேலும் உடலில் பெட்ரோலை ஊற்றி கொலை எரித்துள்ளார்.
embed
யாசகர்கள் இடையே தகராறு
#JustNow | மதுரை நாராயணபுரம் பகுதியில் இரவு படுப்பதற்கு இடம் பிடிப்பதில் 2 யாசகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றொருவர் மீது கல்லை போட்டு கொலை செய்து, அவரை தீ வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு! போலீசார் கொலையாளி முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!...— Sun News (@sunnewstamil) May 22, 2024