இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே
செய்தி முன்னோட்டம்
இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார்.
ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மல்லிகார்ஜுன் கார்கே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பல இண்டியா கூட்டணி தலைவர்களுடன் நடந்த ஆலோசனையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இண்டியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் இந்த விழாவில் கலந்து கொள்ளாது.
இதற்கு முன், பாஜக இரண்டு முறை தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு பிறகுவந்த நிலையில், தற்போது கூட்டணி பலத்துடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி பதவியேற்க உள்ளார்.
இந்தியா
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்கள்
இந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலைதீவு அதிபர் மொஹமட் முய்சு, சீஷெல்ஸ் துணைத் தலைவர் அஹமட் அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் 'பிரசந்தா', பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.
மூன்றாவது நரேந்திர மோடி அரசாங்கத்தில், சந்திரபாபு நாயுடுவின் டிடிபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியு ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சரவை பதவியும், ஒரு மாநில அமைச்சர் பதவியும் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற 11 மணி நேர மாரத்தான் கூட்டத்திற்குப் பிறகு புதிய அமைச்சரவை குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.