
'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே
செய்தி முன்னோட்டம்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது, பாஜக அரசின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்த்தித்துள்ளார்.
இன்று காலை, பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.
இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் துன்புறுத்தல் இது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், "இது மோடி அரசாங்கத்தின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். அது தவிர வேறு எதுவும் இல்லை. எதிர்கட்சியில் இருக்கும் நாங்கள் யாரும் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் பயப்பட மாட்டோம்." என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ஹபிஸ்ப்
செந்தில் பாலாஜியை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்
தமிழ்நாடு மின்சாரத்துறை செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
செந்தில் பாலாஜியின் இல்லம், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை, அவரது சகோரர் வீடு உட்பட பல இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதனையடுத்து, இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த அமலாக்கத் துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.