தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொண்டர்களின் மன உறுதியை உயர்த்தும் விதமாக நடைப்பயணத்திற்கு ராகுல் காந்தி தயாராகி வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் தியோராவின் ராஜினாமா, இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியுடனான அவரது குடும்பத்தின் உறவு 55 ஆண்டுகாலம் பழமையானது என மிலிந்த் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2019 முதல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய தலைவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
card 2
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய முக்கிய தலைவர்கள்
மிலிந்த் தியோரா: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா, காங்கிரஸில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். பின்னர் அவர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கபில் சிபல்: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான மூத்த தலைவருமான கபில் சிபல், 2022 மே 16 அன்று காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார். எனினும் அவர் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் கூறினார்.
card 3
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய முக்கிய தலைவர்கள்
குலாம் நபி ஆசாத்: 2022 இல் கட்சி சந்தித்த மற்றொரு முக்கியான ராஜினாமா, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தினுடையதாகும். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், கட்சியில் "முதிர்ச்சியற்றவர்" என்று ராகுல் காந்தியை குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அவர் இப்போது தனது பிராந்திய கட்சியை, ஜே & கே - ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கியுள்ளார்.
ஹர்திக் படேல்: குஜராத் மாநில தலைவர் ஹர்திக் படேல்-உம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து விலகினார். 2019 ஆம் ஆண்டு தன்னை கட்சிக்குள் கொண்டு வந்த ராகுல் காந்தியைத் தாக்கி அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஒரு மாதம் கழித்து பாஜகவில் சேர்ந்தார்.
card 4
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய முக்கிய தலைவர்கள்
அஸ்வனி குமார்: முன்னாள் மத்திய அமைச்சரான அஸ்வனி குமார், பஞ்சாப் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 2022 இல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார். 2019 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியை விட்டு வெளியேறிய முதல் மூத்த UPA அமைச்சரவை அமைச்சர் ஆவார் இவர்.
சுனில் ஜாகர்: பஞ்சாப் காங்கிரஸ் பிரிவுக்கு தலைமை தாங்கிய சுனில் ஜாகர், 2022ல், அப்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்ததற்காக, தலைமை அவரைக் கண்டித்ததால், கட்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து அவர் மே மாதம் பாஜகவில் சேர்ந்தார்.
card 5
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய முக்கிய தலைவர்கள்
ஆர்பிஎன் சிங்: முன்னாள் மத்திய மந்திரி ஆர்.பி.என். சிங் காங்கிரஸில் இருந்து விலகி 2022 ஜனவரியில் பாஜகவில் சேர்ந்தார். ஒரு முக்கிய பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவரான திரு சிங், பிரியங்கா காந்தி தலைமையிலான உ.பி. பிரச்சாரத்தில் ஓரங்கட்டப்பட்டதால் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது.
ஜோதிராதித்ய சிந்தியா: தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸிலிருந்து விலகி, 2020 இல் பாஜகவில் சேர்ந்தார். கமல்நாத் அரசாங்கத்தை வீழ்த்தி, மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌஹான் மீண்டும் தலைமைப் பதவிக்கு வர உதவினார்.
card 6
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய முக்கிய தலைவர்கள்
அமரீந்தர் சிங்: கடந்த செப்டம்பர் 2021 இல், அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே, முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கட்சியினால் அவர் "மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டார்" என்றும், "தாங்கள் நம்பும் யாரை வேண்டுமானாலும் நியமிக்க" காங்கிரஸுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் அவர் அப்போது கூறினார். தொடர்ந்து அவர்,பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் தொடங்கி, அடுத்த வந்த தேர்தலில் பாஜகவுடன் இணைந்தார்.
ஜிதின் பிரசாத்: ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜிதின் பிரசாத், உத்தரப் பிரதேச தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு 2021 இல் பாஜகவில் இணைந்தார்.
card 7
காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய முக்கிய தலைவர்கள்
அல்பேஷ் தாக்கூர்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அல்பேஷ் தாக்கூர், இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்த பின்னர், ஜூலை 2019இல் கட்சியில் இருந்து விலகினார். சில நாட்களுக்குப் பிறகு அவர் பாஜகவில் சேர்ந்தார், கூடுதலாக ராதாபூரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பாக நிறுத்தப்பட்டார்.
அனில் ஆண்டனி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன், அனில் ஆண்டனி. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து விலகி, அடுத்த மாதம் பாஜகவில் சேர்ந்தார். இந்தியாவை ஒரு முன்னணி இடத்தில் வைக்கும் தெளிவான பார்வை கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி, தனது மகனின் முடிவு குறித்து வேதனையும் ஏமாற்றமும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது