Page Loader
ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம் 

ஐஏஎஸ் ஆவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் : அதிகார தலைக்கனத்தில் ஆடிய பெண் பணியிட மாற்றம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 10, 2024
05:49 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணியமர்த்தப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், மத்திய மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, அவர் ஜூலை 30, 2025 வரை "சூப்பர்நியூமரி உதவி கலெக்டராக" பணியாற்றுவார். தனக்கு ஒரு தனி அறை, கார், குடியிருப்பு மற்றும் ஒரு பியூன் வழங்க வேண்டும் என்று பதவியில் சேர்வதற்கு முன்பே பூஜா கேத்கர் பலமுறை கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பூஜாவின் கோரிக்கையை கேட்ட அதிகாரிகள், பயிற்சி காலங்களில் இதுபோன்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை என்று கூறினர்.

மகாராஷ்டிரா 

வேலையில் சேர்வதற்கு முன்பே சைரன் காரில் சுற்றிய  பூஜா 

மேலும், அவருக்கு பொருத்தமான தங்குமிடம் வழங்கப்படும் என்றும் அவரிடம் தெரிவித்தனர். ஆனால், பூஜா அதை ஏற்கவில்லை. இதற்கிடையில், பூஜா தனது தனிப்பட்ட ஆடி காரை சிவப்பு-நீல சைரன் லைட் மற்றும் விஐபி நம்பர் பிளேட்டுடன் பயன்படுத்தி இருக்கிறார். அரசாங்க விதிகளின்படி, இவைகள் பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவர் தனது தனிப்பட்ட காரில் 'மகாராஷ்டிரா அரசு' என்ற போர்டையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இதனையடுத்து, புனே ஆட்சியர் சுஹாஸ் திவ்சே, கேத்கரின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பொது நிர்வாகத் துறைக்கு (ஜிஏடி) புகார் அளித்தார். புனே கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரியின் பெயர் பலகையை அகற்றியதாகவும் பூஜா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.