Page Loader
அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 11, 2024
12:31 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனக்கும் உரிமை உண்டு என ஒபிஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், அதற்கு தடை விதித்திருந்தது தனி நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் ஒபிஸ். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த, தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஓபிஸ் தரப்பினர், கட்சி சார்ந்த கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வாதங்களை கேட்ட அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு