அமைச்சர் செந்தில் பாலாஜி: நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன்-28 வரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று, நேற்று நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தரப்பட்டது.
இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றதில், அந்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.
அதன்படி, ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல என குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சரை, காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பான மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி
#BREAKING || நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
— Thanthi TV (@ThanthiTV) June 15, 2023
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல -… pic.twitter.com/93s2E8c988