NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்
    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்

    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 04, 2023
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணை இழுபறியில் இருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும், அவர் சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் அமர்வு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கில் இதுவரை நடந்ததாவது:

    சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15வரை நீட்டிக்கப்பட்டது.

    card 2

    இழுபறியில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை

    இதனை தொடர்ந்து, ஜாமீன் வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், ஜாமீனுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

    அதைத் தொடர்ந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனு புதன்கிழமை (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனு மீது உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறினார்.

    இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், எனவே உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் தெரிவித்திருந்தது.

    அதன் தொடர்ச்சியாகவே தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    சென்னை உயர் நீதிமன்றம்
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    செந்தில் பாலாஜி

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு
    'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம் தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு தமிழ்நாடு
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை
    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு ஜெயலலிதா
    மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு கோலிவுட்

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025