Page Loader
EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 
அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 

எழுதியவர் Nivetha P
Oct 06, 2023
06:28 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுக பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர் செல்வம் உபயோகப்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொது செயலாளராக தம்மை உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கூறிவருவதாகவும், கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருவதால் தொண்டர்கள் குழப்பம் அடைகிறார்கள். இதனால் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்த விசாரணை கடந்த மாதம் 21ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை 

பதிலளிக்க கால அவகாசம் கோரி வாதம் செய்த ஓபிஎஸ் தரப்பு 

அப்போது இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு குறித்து ஓபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என்றுக்கூறி வழக்கை அக்.,6ம்தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இதன் விசாரணை இன்று மீண்டும். அப்போது, ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தன்னை நீக்கிய தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தான் இவவழக்கிற்கான பதிலை அளிக்க முடியும். எனவே, பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளது. அந்த கோரிக்கையினை ஏற்ற நீதிபதி இவ்வழக்கின் அடுத்த விசாரணையினை வரும் நவம்பர் 7ம்.,தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.