
மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
செய்தி முன்னோட்டம்
ஒரு வைரல் வீடியோவில், பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா நேற்று(ஜூலை 4) இரவு கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்து, சுக்லா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, காவல்துறையினர் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது, போலீஸார் பிரவேஷ் சுக்லாவை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுக்லாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம்(IPC), மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294(ஆபாசமான செயல்கள்) மற்றும் 504(அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பது) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜ்னவ்ஜ்க்க்
குற்றம் சாட்டப்பட்ட நபர் பாஜகவை சேர்ந்தவரா?
இந்த வைரலான வீடியோ குறித்து பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு "கடுமையான தண்டனையை" அரசாங்கம் வாங்கி தரும் என்றும் சிங் சவுகான் தெரிவித்தார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சுக்லா பாஜகவை சேர்ந்தவர் என்ற செய்திகளும் வெளியாகியது.
பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவிற்கு நன்கு தெரிந்தவர் தான் இந்த பிரவேஷ் சுக்லா என்று கூறப்பட்டது.
இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை பிரவேஷ் சுக்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஆனால், இந்த தகவலை பாஜக தலைவர்கள் முற்றிலுமாக மறுத்துவிட்டனர்.