தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சாண்டியாகோ மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங்கில் இருந்து ₹540 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று, சாண்டியாகோ மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் மிகப்பெரிய பயனாளியாக மாறியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பாரதிய ஜனதாவும் ₹100 கோடி பெற்றுள்ளது. திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர, இந்த நிறுவனம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவற்றிற்கும் நன்கொடை அளித்ததுள்ளது. ஃபியூச்சர் கேமிங், தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாங்கிய தேர்தல் பாத்திரங்களின் மொத்த கொள்முதலின் மதிப்பு ₹1,368 கோடி.
தமிழகத்தில் அதிக நிதி பெற்ற கட்சி - திமுக
சாண்டியாகோ மார்ட்டின் நிறுவனம், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவுக்கு ₹509 கோடியும், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட ₹ 160 கோடியும், பாஜகவுக்கு ₹100 கோடியும், காங்கிரஸுக்கு ₹50 கோடியும் வழங்கியுள்ளது. சிக்கிமின் இரு கட்சிகளும் சேர்ந்து நிறுவனத்திடமிருந்து ₹ 10 கோடிக்கும் குறைவாகவே பெற்றுள்ளன. மறுபுறம், மேகா இன்ஜினியரிங் நிறுவனம்- ₹ 966 கோடியை வழங்கிய இரண்டாவது பெரிய நன்கொடையாளர், பாஜக, பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் திமுகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு ₹ 584 கோடி நன்கொடை அளித்துள்ளது. நன்கொடை வழங்கும் மூன்றாவது பெரிய நிறுவனமான Qwik சப்ளை, ₹410 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. பாஜகவுக்கு ₹395 கோடியும், சிவசேனாவுக்கு ₹25 கோடியும் வழங்கியுள்ளது.
அதிக நன்கொடைகளை பெற்ற கட்சி - பாஜக
மொத்தம் ₹6000 கோடிக்கும் அதிகமான நன்கொடைகளுடன் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளி பாஜக. ஒரே கொல்கத்தா முகவரியைக் கொண்ட மூன்று நிறுவனங்களான கெவென்டர்ஸ் ஃபுட் பார்க், எம்கேஜே எண்டர்பிரைசஸ் மற்றும் மதன்லால் லிமிடெட் ஆகியவற்றிலிருந்து கட்சி ₹346 கோடியைப் பெற்றது. வேடநாடா ₹226 கோடியும், ஹால்டியா எனர்ஜி ₹81 கோடியும் பங்களித்தது. வேதாந்தா நிறுவனமும், காங்கிரஸுக்கு ₹125 கோடி நன்கொடை அளித்துள்ளது. வெஸ்டர்ன் யுபி பவர் அண்ட் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திடமிருந்து ₹80 கோடியும், வெல்ஸ்பனிடமிருந்து ₹42 கோடியும் நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. தொழிலதிபர் லட்சுமி மிட்டல் பாஜகவுக்கு ₹35 கோடி நன்கொடை அளித்துள்ளார்.