LOADING...
ECINET செயலி மூலம் இ-வாக்காளர் அட்டை பெறுவது எப்படி? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!
ECINET செயலி மூலம் இ-வாக்காளர் அட்டை பெறும் முறைகள்

ECINET செயலி மூலம் இ-வாக்காளர் அட்டை பெறுவது எப்படி? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

எழுதியவர் Vasuki
Apr 20, 2026
03:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் 100% வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. உங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லையென்றாலும், எளிதாக டிஜிட்டல் அட்டையைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தியோ வாக்களிக்கலாம்.

டிஜிட்டல் முறை

டிஜிட்டல் வாக்காளர் அட்டையை (e-Voter ID) பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையத்தின் 'ECINET' என்ற அதிகாரப்பூர்வ செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலேயே டிஜிட்டல் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம் உங்கள் மொபைலில் 'ECINET' செயலியைப் பதிவிறக்கம் செய்து 'Login' செய்யவும். அதில் உள்ள 'Download e-Voter' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC Number) மற்றும் மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 'OTP'-யைப் பதிவிட்டால், டிஜிட்டல் வாக்காளர் அட்டை தயாராகிவிடும். இதனைப் பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளலாம். வாக்காளர் எண் தெரியவில்லையா? 'ECINET' செயலியில் 'Search By Details' பகுதிக்குச் சென்று உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி விவரங்களைக் குறிப்பிட்டால் உங்கள் வாக்காளர் எண்ணைக் கண்டறியலாம்.

தேர்தல் ஆணையம்

மாற்று ஆவணங்கள்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து நீங்கள் வாக்களிக்கலாமெனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அடையாள அட்டை (Aadhaar Card) ஓட்டுநர் உரிமம் (Driving License) இந்திய கடவுச்சீட்டு (Passport) நிரந்தர கணக்கு எண் (PAN Card) வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய https://www.eci.gov.in/ என்ற இணையதளத்தைச் சரிபார்க்கவும். பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே உங்களால் வாக்களிக்க முடியும். கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தவறாதீர்கள்! ஏப்ரல் 23 அன்று மறக்காமல் உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்.

Advertisement