LOADING...
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 18% வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
722 வேட்பாளர்கள் (18%) குற்றப் பின்னணி கொண்டவர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 18% வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2026
10:09 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்த அதிரடி தகவல்களை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 4,023 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்களை தொகுத்துள்ளது. அதன்படி, 722 வேட்பாளர்கள் (18%) குற்றப் பின்னணி கொண்டவர்கள். அதில், 404 வேட்பாளர்கள் (10%) கொலை, கொலை முயற்சி போன்ற தீவிர வழக்குகளைக் கொண்டுள்ளனர். கொலை வழக்கு- 13 பேர், கொலை முயற்சி- 44 பேர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கை 18 பேர் எதிர்கொண்டுள்ளனர்.

கட்சி வாரியாக

கட்சி வாரியாக வேட்பாளர்களின் குற்ற பின்னணி

அந்த அறிக்கையில் மேலும் கட்சிவாரியாக குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டது. அதிமுக 60 வேட்பாளர்களும், தமிழக வெற்றிக் கழகத்தில் 43 வேட்பாளர்களும், திமுகவில் 32 வேட்பாளர்களும் உள்ளனர். பாஜகவில் 9, பாமகவில் 6, காங்கிரஸ் 5 மற்றும் தேமுதிகவில் 1 வேட்பாளர் குற்றப்பின்னணியை கொண்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை விட, இந்தத் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது கவலைக்குரிய ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement