வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்! சரிந்த தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 20) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹60 குறைந்து ₹14,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹480 குறைந்து ₹1,14,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹66 குறைந்து ₹15,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹528 குறைந்து ₹1,24,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹125 குறைந்து ₹11,855 ஆகவும், ஒரு சவரன் ₹1,000 குறைந்து ₹94,840 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹280.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.