கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி-நாகர்கோவில் மாநகராட்சியில் அமைந்துள்ளது முதன்மை கத்தோலிக்க ஆலயமான புனித சவேரியார் பேராலயம். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில் திருவிழா துவங்கப்பட்டு டிசமபர் முதல்வாரத்தில் நிறைவுப்பெறும். அதன்படி இந்தாண்டு கடந்த 24ம்.,தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவின் கடைசி நாளான டிசம்பர் 4ம்.,தேதி காலையில் 6 மணியளவில் பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் மாலை 7 மணியளவில் நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் டிச.,16ம்.,தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.