
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஆடி கிருத்திகை திருவிழா என்பது மிக விமர்சையாக தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற முருகர் கோயில்களில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நாளை(ஆகஸ்ட்.,8) ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி, திருத்தணி உள்ளிட்ட முருகர் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளினை ஈடு செய்ய வரும் 12ம் தேதி சனிக்கிழமையன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
#NewsUpdate | ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!#SunNews | #Ranipet | #LocalHoliday pic.twitter.com/0Cf6jho4UZ
— Sun News (@sunnewstamil) August 8, 2023